தமிழ்நாட்டில் 30 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளும், 450–க்கும் மேற்பட்ட தனியார் பாலிடெனிக் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இங்கு பல்வேறு என்ஜினீயரிங் பிரிவுகளில் 3 ஆண்டு கால பட்டயப் படிப்புகள் (டிப்ளமோ) வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு ஸ்ரீரங்கம், பெருந்துறை, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, திருமங்கலம், ஜோலார்பேட்டை, செய்யார் உள்பட 11 இடங்களில் புதிதாக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளன.புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த கல்லூரிகளில் செய்யாறு கல்லூரி நீங்கலாக எஞ்சிய 10 கல்லூரிகளுக்கும் தலா 18 விரிவுரையாளர் பணி இடங்கள் வீதம் 180 விரிவுரையாளர் பணி அடங்களுக்கு அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. இதற்கான உத்தரவைதமிழக அரசின் உயர்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் அபூர்வ வர்மா பிறப்பித்து உள்ளார். மொத்தம் உள்ள காலி பணி இடங்களில்ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய என்ஜினீயரிங் சாரா பாடப்பிரிவுகளும் அடங்கும். இந்த காலி பணி இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலமாக நேரடியாகநடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Jul 17, 2013
Home
LECTURER
11 புதிய அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 180 விரிவுரையாளர் பணி இடங்களுக்கு அனுமதி தமிழக அரசு உத்தரவ
11 புதிய அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 180 விரிவுரையாளர் பணி இடங்களுக்கு அனுமதி தமிழக அரசு உத்தரவ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி