கிராமப்புற மாணவர்களுக்கான, ஊரக திறனாய்வு தேர்வு, செப்., 22 ல் நடக்கிறது. விண்ணப்பங்களை, "ஆன் லைன்' ல், பெறலாம். எட்டாம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்று, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், விண்ணப்பிக்கலாம். பெற்றோரின் ஆண்டு வருமானம், ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு, 9 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, ஆண்டுக்கு, 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.தேர்வு விண்ணப்பங்கள், பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.இந்த ஆண்டு முதல், www.peps.tn.nic.in என்ற இணையதள முகவரியில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. விண்ணப்பத்துடன், வருவாய் சான்று இணைத்து, ஆக., 2 க்குள், முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும். தேர்வு மற்றும் சேவைக்கட்டணமாக தலா 5 ரூபாய் என, 10 ரூபாயை தலைமைஆசிரியர் மூலம், முதன்மைக் கல்வி அலுவலரிடம் செலுத்த வேண்டும்."பூர்த்தி செய்த விண்ணப்பங்களையும், "ஆன் லைன்' மூலம், தேர்வுத்துறை பெற்றுக் கொண்டால், மாணவர்களுக்கு எளிதாகஇருக்கும், என, ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி