தமிழகத்தில் 17000 பள்ளிகளில் 2 ஆசிரியர் மட்டுமே உள்ளனர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 24, 2013

தமிழகத்தில் 17000 பள்ளிகளில் 2 ஆசிரியர் மட்டுமே உள்ளனர்.

தமிழகத்தில் 17000 தொடக்கப்பள்ளிகளில் 2 ஆசிரியர்களே பணியாற்றுவதாக அரசு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்த கட்டாயக் கல்விஉரிமை சட்டத்தில் 6 முதல் 14வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கல்வி உறுதி செய்யப்பட வேண்டும்என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதில் பல்வேறு சலுகைகளை அறிவித்து அரசு உத்தரவிட்டது.இந்நிலையில் தொடக்கப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இருக்கிறார் களா என்பது குறித்து பள்ளிக் கல்வி மேலாண்மை தகவல்(எஸ்.இ.எம்.ஐ.எஸ்) மையம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் சில பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாகவும், 17000 பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாகவும் இயங்குவது தெரியவந்துள்ளது.கடந்த 2011,12ம் ஆண்டு கணக்குப்படி தமிழகத்தில் 34871 தொடக்கப் பள்ளிகள் இயங்கின. அவற்றில் 60986 ஆசிரியர்களும், நிதியுதவி பெறும் பள்ளிகளில் 24338 ஆசிரியர்களும் பணியாற்றினர். தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 33000 தொடக்கப்பள்ளிகள் உள்ளன.அவற்றில் சுமார் 30 லட்சம் குழந்தைகள் படிக்கின்றனர். தொடக்கப் பள்ளிகள் குறித்து எஸ்.இ.எம்.ஐ.எஸ் எடுத்த புள்ளிவிவரப்படி மேற்கண்ட தகவல் பெறப்பட்டுள்ளது.மேலும் மலைப்பிரதேசம், எல்லையோரம் போன்ற பகுதிகளில் இயங்கும்பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே உள்ளதாகஅந்த புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது. இது தவிர 5 குழந்தைகள் மட்டுமே படிக்கும் பள்ளிகள் 500 என்பதும் தெரியவந்துள்ளது. 5 முதல் 25 குழந்தைகள் இருந்தாலும் அந்தபள்ளிக்கு 2 ஆசிரியர்தான் நியமிக்க முடியும் என்பதால் இரண்டு ஆசிரியர்களை கொண்டே இவை இயங்குகின்றன. இந்த விவரம் தற்போது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கூறுகையில், தமிழகத்தில் ஓராசிரியர் பள்ளிகள் என்பது கிடையாது. ஆனால் 2 ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகளில் ஒருவர் மாறுதலாகியோ, மாற்றுப்பணிக்கோ சென்றுவிட்டால் ஒரு ஆசிரியர்தான் கவனிக்க வேண்டும். தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு புள்ளி விவரம் எடுப்பது, மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி, உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுத்துவதால் ஒரு ஆசிரியர்தான் பள்ளிகளில் இருக்க வேண்டிய நிலை உள்ளது.ஆசிரியர் மாணவர் விகிதாசாரப் படி, குறைந்த மாணவர் உள்ள பள்ளிக்கு 2 ஆசிரியருக்கு மேல் நியமிக்க முடியாது என்று விதி உள்ளதே இதற்கு காரணம். இதுபோன்ற பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்த்து தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி