பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாததால் இந்த ஆண்டே உயர்கல்வியில் சேர முடியாமல் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கவலை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 24, 2013

பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாததால் இந்த ஆண்டே உயர்கல்வியில் சேர முடியாமல் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கவலை.

பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாததால் இந்த ஆண்டே உயர்கல்வியில் சேர முடியாமல் 50 ஆயிரத்திற்கும்மேற்பட்ட மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.கடந்த 2012&13ம் கல்வி ஆண்டிற்கானபிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடந்தது. இதன் முடிவுகள்மே 9ம் தேதி வெளியானது. இதில் தேர்ச்சி அடையாதவர்களுக்கு கடந்த மாதம் 19ம் தேதி முதல் உடனடி சிறப்பு தேர்வு நடத்தப்பட்டது. இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்ச்சியடையாத பாடங்களுக்கு தேர்வு எழுதினர்.இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் திருத்தும் பணி கடந்த வாரம்தான் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாததால் இத்தேர்வை எழுதிய 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த கல்வி ஆண்டிலேயே உயர்கல்விக்கு சேர்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் ரெகுலர் மற்றும் மாலை நேர வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நிறைவு பெற்று வகுப்புகள் தொடங்கி ஒரு மாதமாகிறது.இனி உடனடித் தேர்வு முடிவுகள் வெளியாகி, அதன் பின் சான்றிதழ்களை பெற்று, இந்த கல்வி ஆண்டிலேயே உயர்கல்வியில் சேர்வது கடினமான செயலாக இருக்கும் என்பதால், இத்தேர்வை எழுதிய மாணவர்கள் தவிப்பில் உள்ளனர்.இதுகுறித்து, மாணவர்கள் கூறுகையில், Ôஉடனடித் தேர்வின் நோக்கமே அதில் தேர்வாகும் மாணவர்கள் நாட்களை வீணாக்காமல் இந்த கல்வி ஆண்டிலேயே உயர் கல்வியில் சேர்வதுதான். ஆனால் எப்போதும் இல்லாத அளவு இந்த ஆண்டு ரிசல்ட் வெளியாக தாமதம் ஏற்பட்டு வருவதால் எங்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு இந்த ஆண்டிலேயே கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.பல மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து, ஏதாவது ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சியடையாமல் உள்ளனர். அந்த மாணவர்கள் உடனடித் தேர்வில் நிச்சயம் வெற்றி பெற்று, இந்த கல்வி ஆண்டிலேயே உயர்கல்வியை தொடர முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். எனவே, இனியும் தமாமதிக்காது உடனடி தேர்வு முடிவுகளை காலதாமதமின்றி வெளியிட வேண்டும்‘ என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி