ஆசிரியர் பயிற்சிப் படிப்பில், 2,527 இடங்கள் நிரம்பின. அரசு, அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் உள்ள, அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என, 17 ஆயிரம் இடங்கள் உள்ளன.இதனை நிரப்ப, கடந்த மாதம், விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. 4,419 மாணவர் விண்ணப்பித்தனர். இதைத் தொடர்ந்து, கடந்த, 8ம் தேதியில் இருந்து, 15ம் தேதி வரை, "ஆன்-லைன்' வழியில், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்தது. இதில், 2,527 மாணவர்கள் சேர்ந்தனர் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இவர்களில், 90 சதவீதம் பேர், அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளிலும், 10 சதவீதம் பேர், தனியார் பள்ளிகளிலும் சேர்ந்தனர் என்றும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஆண்டு, 10 ஆயிரம் இடங்கள் வரை காலியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு, 14,473 ஆக அதிகரித்துள்ளது. மொத்த இடங்களில், 14.86 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன. விண்ணப்பித்த மாணவர்களில், 1,892பேர், "ஆப்சென்ட்' ஆகினர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி