தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: விதிகளை திருத்த இயக்குனர் பரிந்துரை . - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 17, 2013

தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: விதிகளை திருத்த இயக்குனர் பரிந்துரை .

மொழி ஆசிரியர்கள் (தமிழ், தெலுங்கு) தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற, பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாடுகளை விதித்தது. இதை திருத்தம் செய்ய, பள்ளிக்கல்வி முதன்மைச் செயலருக்கு, இயக்குனர் பரிந்துரை செய்துள்ளார். மொழி ஆசிரியர்கள், பி.எட்., பட்டம் பெறாமல், ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர். பின், பி.எட்., பட்டம் பெறுகின்றனர். தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு, பி.எட்., பட்டம் பெற்ற நாளில் இருந்தே, பணி மூப்பு கணக்கிடப்படுகிறது. இதனால், அவர்களுக்குப்பின் பணியில் சேர்ந்தவர்கள், பதவி உயர்வில், தலைமை ஆசிரியர்களாகி விடுகின்றனர்.இந்நடைமுறையை மாற்ற, தமிழாசிரியர் கழகம் சார்பில், வழக்கு தொடரப்பட்டது. இதன்படி, தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு, இடைக்கால தடை விதித்து, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால், தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல், நிலுவையில் கிடக்கிறது. இந்நிலையில், "பணியில் சேர்ந்த நாளில் இருந்தே, பணி மூப்பு கணக்கிடும் வகையில், பணி விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும்' என, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலருக்கு, அத்துறையின் இயக்குனர் பரிந்துரை செய்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி