2ம்கட்ட கவுன்சிலிங்கும் கண்துடைப்பே: முதுகலை ஆசிரியர்கள் புலம்பல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 22, 2013

2ம்கட்ட கவுன்சிலிங்கும் கண்துடைப்பே: முதுகலை ஆசிரியர்கள் புலம்பல்.

"மதுரையில் நடந்த 2ம் கட்ட கவுன்சிலிங்கும் முறையாக நடக்காமல், கண் துடைப்பாகவே நடந்தது" என முதுகலை ஆசிரியர்கள்வேதனை தெரிவித்தனர்.மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு கடந்த மேயில் முதற்கட்ட இடமாறுதல் கவுன்சிலிங் நடந்தது. நேற்று தரம் உயர்த்தப்பட்ட அம்மாபட்டி, மங்களாம்பட்டி, பொட்டப்பட்டி பள்ளிகளுக்காக, இரண்டாம் கட்ட கவுன்சிலிங் முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்தது. இதில் 27 பணியிடங்களுக்கு 11 இடங்களை மறைத்துவிட்டனர். மீதி 16 இடங்களையே காட்டினர். இந்த இடங்களில் 5 இடங்களை ஆசிரியர்கள்தேர்வு செய்தனர்.முதுகலை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன் கூறியதாவது: இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கை நாங்கள்தான் வலியுறுத்தி பெற்றோம். ஆனால் அது முறையாக நடக்கவில்லை. இதனை ஆன்லைனில் நடக்காமல், வாய்மொழியாகவே நடத்தினர்.தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு, ஜூலை 19 கவுன்சிலிங் நடந்தது. அதிலும் சிலஇடங்களை மறைத்தனர். அந்த இடங்களுக்கு 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் இடத்தையும் மறைத்தனர். அதேபோல 5 முதுகலை ஆசிரியர்கள் இன்று இடமாறுதல் பெற்றனர். அவர்களின் இடத்தையும் காண்பிக்காமல் பெரும் முறைகேடாக நடந்துள்ளது. எனவே இக்கவுன்சிலிங்கை மீண்டும், முறையாக நடத்த வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி