தொழில்நுட்ப கோளாறால் தவிப்பு டிஆர்பி போட்டி தேர்வு 8,000 பேர் எழுதவில்லை - நாளிதழ் செய்தி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 22, 2013

தொழில்நுட்ப கோளாறால் தவிப்பு டிஆர்பி போட்டி தேர்வு 8,000 பேர் எழுதவில்லை - நாளிதழ் செய்தி.

டிஆர்பி அலுவலக குளறு படியால் ஹால்டிக்கெட் கிடைக்காத 8000 பேர் நேற்று போட்டித் தேர்வை எழுத முடியாமல் திரும்பினர். அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2881 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வு நேற்றுநடந்தது. இந்த தேர்வுக்கு 1 லட்சத்து 67 ஆயிரத்து 662பேர் தகுதி உள்ளவர்கள் என அறிவிக்கப்பட்டனர்.தேர்வுக்காக  32 மாவட்டங்களில் 421 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.  கேள்வித்தாள் கட்டு காப்பாளர், முதன்மை தேர்வாளர் மற்றும் துறை அலுவலர்கள் என 3387 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் மேற்பார்வையாளர்களாக 8383 பேர் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து நேற்று நடந்த தேர்வில் 1 லட்சத்து 59 ஆயிரத்து750 பேர் பங்கேற்றனர். 7912 பேர் தேர்வு எழுத வரவில்லை.சென்னையில் 13927 பேர் விண்ணப்பித்து இருந்தனர். சென்னையில் 55 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. சென்னையில் 12908 பேர் தேர்வு எழுதினர். 1019 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த போட்டி தேர்வில் பார்வைத் திறன் குறைவுடைய பட்டதாரிகளுக்கு கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்கப்பட்டது. பார்வைத் திறன் குறைவுடையோர், மாற்று திறனாளிகளுக்கு தரைத் தளங்களில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. பார்வைத்திறன் குறைவானவர்களுக்கு உதவியாளர்கள்நியமிக்கப்பட்டு தேர்வு எழுதினர்.நேற்று நடந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் ஆசிரியர் தேர்வுவாரிய இணைய தளத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பே வெளியிடப்பட்டன. விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை அதில் பதிவு செய்து ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம் என்றுஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து இருந்தது. அதன்படி முயற்சி செய்த பலருக்கு ஹால்டிக்கெட் கிடைக்கவில்லை.இது குறித்து பட்டதாரிகள் புகார் தெரிவித்த பிறகு ஆசிரியர் தேர்வு வாரியம் அதற்கு மாற்று ஏற்பாடு செய்தது. எந்த தேதியை பயன்படுத்தினாலும் ஹால் டிக்கெட் பெற முடியும் என்று அறிவித்தது. ஆனால், அதற்கு பிறகும் பலர் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என்று புகார் தெரிவித்தனர். கம்ப்யூட்டர் தொழில்நுட்ப கோளா றால் ஏற்பட்ட இந்த குளறுபடியால் நேற்றைய தேர்வில்சுமார் 8000 பேர் தேர்வு எழுதும் வாய்ப்பை இழந்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி