பிளஸ் 2 உடனடித்தேர்வு: இணையத்தில் முடிவுகள் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 25, 2013

பிளஸ் 2 உடனடித்தேர்வு: இணையத்தில் முடிவுகள் வெளியீடு.

பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவு, தேர்வுத்துறை இணையதளத்தில், இன்று வெளியிடப்படுகிறது. செய்முறை அடங்கிய பாடத்தை எழுதிய தேர்வர்களில் சிலர், செய்முறை மதிப்பெண் குறித்தவிவரங்களை, இணையதளத்தில் பதிவு செய்யாததால், அவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.பிளஸ் 2 உடனடித் தேர்வு, கடந்த மாதம், 19ம் தேதியில் இருந்து, ஜூலை, 1 வரை நடந்தது. இதனை, 83,510 மாணவ, மாணவியர் எழுதினர். இந்த தேர்வு, 244 மையங்களில் நடந்தது. கடந்த ஆண்டு, ஆகஸ்ட், 3ம் தேதி, உடனடித் தேர்வு முடிவு வெளியானநிலையில், இந்தாண்டு, ஒரு வாரத்திற்கு முன்னதாக, இன்று பிற்பகலில் வெளியிடப்படுகிறது என, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.தேர்வர்கள்,www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில்,இன்று பகல், 12:00 மணி முதல், தேர்வு முடிவை அறியலாம். பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்தால், முடிவை அறியலாம்.செய்முறை அடங்கிய பாடத்தை எழுதிய தேர்வர்களில் சிலர், செய்முறை மதிப்பெண் குறித்த விவரங்களை, இணையதளத்தில் பதிவு செய்யாததால், அவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.மேலும், சில தேர்வர்களின் பதிவு எண்கள், தேர்வுத்துறை அலுவலக ஆவணத்துடன் பொருத்தமாக இல்லாததால், அவர்களின் முடிவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இந்த மாணவர்கள், கடந்த மார்ச்சில் தேர்வெழுதி பெற்ற மதிப்பெண் பட்டியலை, மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அதன்பிறகே, இந்த வகை மாணவர்களின் தேர்வு முடிவை வெளியிட முடியும்.தனித்தேர்வர்கள் (கடந்த மார்ச்சில், தனித்தேர்வு எழுதியவர்கள்),வரும், 30ம் தேதி, தேர்வெழுதிய மையங்களுக்குச் சென்று, மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம். "தத்கால்" திட்டத்தில் விண்ணப்பித்து, தேர்வெழுதிய மாணவர்களுக்கு, அவர்களின் வீட்டு முகவரிக்கு, அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.விடைத்தாள் நகல் மற்றும் மறுக்கூட்டல் குறித்த அறிவிப்புகள், விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி