ஜூலை-31-ல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 23, 2013

ஜூலை-31-ல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை.

ஆடிக் கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு, வரும் ஜூலை 31-ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன் அறிவித்துள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வல்லக்கோட்டை முருகன் கோவிலில், ஆடிக் கிருத்திகை திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும். இதில், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்செய்வர்.இந்நிலையில், அன்றைய தினம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளூர்விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கை:காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த, வல்லக்கோட்டைசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், ஆடிக் கிருத்திகை விழாவைமுன்னிட்டு, வரும் 31-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.இதை, ஈடுசெய்யும் வகையில், ஆகஸ்ட் 10-ம் தேதி 2-வது சனிக்கிழமை, பணி நாளாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி