மதுரையை சேர்ந்தவர் கே.கீதா. இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என்னுடைய மகன் அருண் பிளஸ்–2 பொது தேர்வு எழுதினான். உயிரியல் தேர்வில் அ பிரிவில் 13–வது கேள்விக்கு 4 விடைகள் கொடுக்கப்பட்டிருந்தது. அதில், சரியான விடையில் எழுத்து பிழை இருந்தது.இதனால் சரியான விடையை என் மகனால் தேர்வு செய்ய முடியவில்லை. எனவே என் மகனுக்கு ஒரு மதிப்பெண் வழங்க தேர்வுத்துறைக்கு உத்தரவிடவேண்டும்’’ என்று கூறியிருந்தார்.அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘அரசு பொது தேர்வில் மதிப்பெண் வழங்குவது குறித்து இந்த கோர்ட்டு உத்தரவிட முடியாது. இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரியிடம் மனுதாரர் முறையிடலாம்’ என்று உத்தரவிட்டார்.இதன்படி தேர்வுத்துறை அதிகாரியிடம் முறையிட்டும் எந்த பயனும்ஏற்படாததால், ஐகோர்ட்டில் மீண்டும் கீதா வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் கீதா அப்பீல் செய்தார். இந்த அப்பீல் வழக்கை நீதிபதிகள் ஆர்.பானுமதி, டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் விசாரித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அந்த உத்தரவில், ‘அரசு பொது தேர்வில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் அதிகாரத்தை இந்த ஐகோர்ட்டு எடுத்துக்கொள்ள முடியாது’ என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி