அதிக கட்டணம் வசூலித்த 50 பள்ளிகளுக்கு நோட்டீஸ். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 23, 2013

அதிக கட்டணம் வசூலித்த 50 பள்ளிகளுக்கு நோட்டீஸ்.

தமிழக அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட, அதிக கட்டணம் வசூலித்த, 50 தனியார் பள்ளிகளுக்கு, விரைவில், நோட்டீஸ் அனுப்ப, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையிலான கட்டண நிர்ணயக் குழு, சமீபத்தில், 3,000த்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு, புதிய கல்வி கட்டணத்தை நிர்ணயித்து, வெளியிட்டது."குழு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும்; கூடுதல்கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்&' என, குழு எச்சரித்திருந்தது.எனினும், சென்னையில், ஆறு பள்ளிகள் உட்பட, மாநிலம் முழுவதும், 50 தனியார் பள்ளிகள், அதிக கட்டணம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெற்றோர், கட்டண நிர்ணய குழுவிற்கு புகார் அளித்தனர். அந்த புகாரின் மீது, உரிய நடவடிக்கை எடுக்குமாறு, மெட்ரிக் பள்ளி இயக்குனருக்கு, கட்டண நிர்ணய குழு தலைவர் உத்தரவிட்டு உள்ளார்.இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள், பள்ளியில் விசாரணை நடத்தி, அறிக்கை தர, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அறிக்கையின் அடிப்படையில், அதிக கட்டணம் வசூலித்த பள்ளிகளுக்கு, நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க, துறை முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி