மாத சம்பளக்காரர்களுக்கு அளித்த சலுகை நீட்டிப்பு இல்லை; ரூ.5 லட்சத்துக்குள் வருமானம் இருந்தாலும் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தகவல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 23, 2013

மாத சம்பளக்காரர்களுக்கு அளித்த சலுகை நீட்டிப்பு இல்லை; ரூ.5 லட்சத்துக்குள் வருமானம் இருந்தாலும் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தகவல்.

ரூ.5 லட்சத்துக்குள் ஆண்டு வருமானம் உள்ள மாத சம்பளக்காரர்களும் இனிமேல் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது.ரூ.5 லட்சத்துக்குள் ஆண்டு வருமானம் உடைய மாத சம்பளக்காரர்கள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.மத்திய நேரடி வரிகள் வாரியம் அளித்த இச்சலுகையின்படி, 2011–2012 மற்றும் 2012–2013 ஆகிய மதிப்பீட்டு ஆண்டுகளில், ரூ.5 லட்சத்துக்கு கீழ், வருமானம் கொண்டவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை.தாக்கல் செய்ய வேண்டும்இந்நிலையில், அவர்களும் இனிமேல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–ரூ.5 லட்சத்துக்குள் வருமானம் கொண்ட மாத சம்பளக்காரர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு 2011–2012 மற்றும் 2012–2013 ஆகிய மதிப்பீட்டு ஆண்டுகளில் மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.அவர்கள் படிவங்களை தாக்கல் செய்வதாலும், அந்த விவரங்களை ஊழியர்கள் மூலம் கம்ப்யூட்டரில் பதிவேற்றுவதில் உள்ள சிரமம் காரணமாகவும் இந்த விலக்கு அளிக்கப்பட்டது.எளிமையான ஆன்லைன்ஆனால், தற்போது ஆன்லைனில் கணக்கு தாக்கல் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அது மிகவும் எளிமையாக இருக்கிறது. எனவே, ரூ.5 லட்சத்துக்குள் ஆண்டு வருமானம் கொண்ட மாத சம்பளக்காரர்களுக்கான விலக்கு நீட்டிக்கப்படவில்லை. அவர்கள் 2013–2014–ம் மதிப்பீட்டு ஆண்டுக்கு வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.அவர்கள் ஆன்லைன் முறையில் தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆன்லைன் முறை, எளிதானது, பாதுகாப்பானது.அதில் டிஜிட்டல் கையெழுத்தும் கட்டாயம் இல்லை. அவர்கள் ஆன்லைனில் தாக்கல் செய்த படிவங்கள், மிகவிரைவாக கையாளப்படும். இவ்வாறு மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது.கட்டாயம்5 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட மாத சம்பளக்காரர்கள் ஆன்லைன் மூலம் கணக்கு தாக்கல் செய்வதை வருமான வரித்துறை கடந்த மே மாதம் கட்டாயம் ஆக்கியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி