கூடுதல் ஆசிரியர்கள் நியமனத்தில் தமிழாசிரியர்களுக்கு முன்னுரிமை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 19, 2013

கூடுதல் ஆசிரியர்கள் நியமனத்தில் தமிழாசிரியர்களுக்கு முன்னுரிமை.

உயர்நிலைப்பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யும் போது, தமிழாசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க, அரசு பரிசீலனை செய்து வருகிறது. உயர்நிலைப்பள்ளிகளில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம்,பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. 160 மாணவர்கள் இருந்தால், ஐந்து ஆசிரியர்கள் இருப்பார்கள். 160 க்கு மேல் மாணவர்கள் இருக்கும் போது, கூடுதலாக ஆசிரியர்கள் பணி நியமனம் செய்ய வேண்டும்.அப்படி பணி நியமனம் செய்யும் பட்சத்தில், முதலில் தமிழாசிரியர்கள், இரண்டாவதாக கணித ஆசிரியர், மூன்றாவதாக அறிவியல் ஆசிரியர், நான்காவதாக சமூக அறிவில் ஆசிரியர், ஐந்தாவது ஆங்கில ஆசிரியர் என்ற வரிசைப்படி, பணி நியமனம் செய்ய, அரசு பரிசீலனை செய்து வருகிறது. முன்பு, தமிழாசிரியர்கள் நியமனமானது, ஐந்தாவது நிலையில் இருந்தது. தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இதை மாற்றி, முதல் இடத்திற்கு கொண்டு வர, அரசு பரிசீலனை செய்து வருகிறது. விரைவில் கூடுதல் ஆசிரியர்கள் பணி நியமனம் வரவிருப்பதால், தமிழாசிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி