ஆசிரியர்கள் லேப்-டாப் பயன்படுத்துவது கட்டாயம்: தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 24, 2013

ஆசிரியர்கள் லேப்-டாப் பயன்படுத்துவது கட்டாயம்: தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு.

அரசு நடுநிலைப்பள்ளிகளில், வாரத்துக்கு குறைந்தபட்சம் ஐந்து பாடவேளைகள் பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட்ட"லேப்டாப்" அல்லது கம்ப்யூட்டர் பயன்படுத்தி பாடம் கற்பிக்கவேண்டும்" என்று ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.தொடக்கக் கல்வித்துறைக்கு உட்பட்ட 8026 நடுநிலைப்பள்ளிகளுக்கு நான்கு கட்டங்களாக, மடிக்கணினிகள் மற்றும் கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.மேலும், "அனைவருக்கும் கல்வி இயக்கம்" சார்பிலும் பள்ளிகளுக்குகணினிகள் வழங்கப்பட்டுள்ளன.பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட்ட கணினிகள், அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது. மாணவர்களுக்கு கற்பித்தல் பணிக்கு ஆசிரியர்கள் பயன்படுத்துவது கிடையாது என்று புகார் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், மாணவர்களின் கற்பித்தல் பணிக்கு ஆசிரியர்கள் கட்டாயம் அரசு துறையால் வழங்கப்பட்ட கணினி, மடிக்கணினி பயன்படுத்த வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவுரைகள் பாடவாரியாக தொகுத்து முதன்மை கல்வி அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.பள்ளி கல்வித்துறையின் உத்தரவின்படி, வாரத்துக்கு குறைந்தது ஐந்து பாடவேளைகளில், குறுந்தகடுகள் துணையோடும், இணையதளங்களில் இருந்து பாடம் சார்ந்த வீடியோக்கள் மற்றும் பவர் பாயின்ட்டுகளை பதிவிறக்கம் செய்து 3டி, அனிமேஷன் உள்ளிட்ட முறைகளில், லேப்டாப் பயன்படுத்தி, ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கவேண்டும்.கோவை மாவட்டத்தில், 244 நடுநிலைப் பள்ளிகளுக்கு மடிக்கணினி மற்றும் கணினி வழங்கப்பட்டுள்ளது. இக்கணினி பயன்பாடு கற்பித்தல்முறையில் கட்டாயம் என்ற தகவல் அனுப்பப்பட்டு பள்ளி கற்பித்தல் முறையை மாவட்ட தொடக்கல்வி அலுவலக மேற்பார்வையில் கண்காணிக்கப்படுகிறது. உணவு இடைவேளைக்கு முன்பு, அல்லது பின்பு உள்ள பாடவகுப்புகளை கணினி வழி கற்பித்தல் முறைக்கு பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி