பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் இறப்பு, நெய்வேலியில் குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கத்தையடுத்து, தமிழகம்முழுவதும் உள்ள பள்ளி, அங்கன்வாடி சத்துணவு மையங்களை, உணவு பாதுகாப்புத் துறை மூலம் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது; ஆய்வுப் பணி இன்று தொடங்குகிறது.இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்களைஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.சமையல் அறைகள் சுத்தமாக உள்ளதா, சமையலுக்கு பயன்படும் எண்ணெய், உணவுப் பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா, சுத்தமான தண்ணீரில் சமையல் செய்யப்படுகிறதா என, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்வர்.சுகாதாரமாக இல்லாவிட்டால், அதுகுறித்து ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்படும். உணவின் தரம் மோசமாக இருக்கும் பட்சத்தில், உணவின் மாதிரிகளை எடுத்து பரிசோதிக்கவும், திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகள், உடனடியாக தொடங்கும்.சென்னையில், அனைத்து பகுதிகளிலும் இன்று ஆய்வு தொடங்குகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி