பள்ளிகளில் அடிப்படை வசதி: விரைவில் ஆய்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 20, 2013

பள்ளிகளில் அடிப்படை வசதி: விரைவில் ஆய்வு.

அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து விரைவில் கல்வித்துறை ஆய்வு செய்ய உள்ளது.இதுகுறித்து, கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது: நபார்டு வங்கி கடனுதவி மூலம், அரசு பள்ளிகளில், புதிய கட்டடங்கள் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படுகின்றன."பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் எண்ணிக்கைக்கு ஏற்ப, தேவையான எண்ணிக்கையில், கழிப்பறை வசதி மற்றும் குடிநீர் வசதி இருக்க வேண்டும்" என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.இந்த, இரு அம்சங்கள் குறித்தும், விரைவில், மாவட்ட வாரியாக ஆய்வுசெய்யப்பட உள்ளது. ஆய்வின் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கைஎடுக்கப்படும். கல்வித் துறை இணை இயக்குனர்கள், ஆய்வுப் பணியில்ஈடுபடுவர். இவ்வாறு, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி