விடுதி மாணவர் உணவு நிதியை உயர்த்த தமிழக அரசு திட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 20, 2013

விடுதி மாணவர் உணவு நிதியை உயர்த்த தமிழக அரசு திட்டம்.

தமிழகத்தில் உள்ள, அரசு விடுதிகளில் தங்கி படித்து வரும், பள்ளி, கல்லூரி மாணவர்களின் உணவுக்கான நிதியை உயர்த்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் செயல்படும், 1,300 ஆதிதிராவிடர் நல விடுதிகளில், 97,239 மாணவர்; 42 பழங்குடியினர் நல விடுதிகளில், 2,782 மாணவர்; 301 உண்டு உறைவிட பள்ளிகளில், 31,899 மாணவர் தங்கியுள்ளனர். அதே போல், பிற்படுத்தப்பட்டோருக்காக, 1,294 விடுதிகள் உள்ளன.இதில், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை கீழ், 710 விடுதி; மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறை கீழ், 572 விடுதி; சிறுபான்மை நலத் துறை கீழ், 12 விடுதிகள் செயல்படுகின்றன. இவ்விடுதிகளில், 80,064 மாணவர்தங்கியுள்ளனர்.இவர்களின் தினசரி உணவுக்காக, பள்ளி மாணவருக்கு, 65 ரூபாயும், கல்லூரி மாணவருக்கு, 75 ரூபாயும் ஒதுக்கப்படுகிறது. மேலும், குடியரசு தினம், சுதந்திர தினம், தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட சிறப்பு நாட்களில், உணவில், இனிப்பு வகைகளை சேர்க்க, பள்ளி மாணவருக்கு, 2 ரூபாய்; கல்லூரி மாணவருக்கு, 3 ரூபாய் ஒதுக்கப்படுகிறது.கடந்த சில ஆண்டுகளாக, நிலவி வரும் விலைவாசி ஏற்றத்தால், காய்கறி,இறைச்சி விலை, பல மடங்கு உயர்ந்து வருகிறது. இதனால், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில், காய்கறிகளும், இறைச்சியும் வாங்குவதில், சிக்கல் நிலவி வந்தது.இந்நிலையில், விடுதி மாணவர்களின் உணவுக்கு ஒதுக்கப்படும், நிதியை உயர்த்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.குறிப்பாக, பள்ளி மாணவருக்கு, 65 ரூபாயிலிருந்து, 105 ரூபாய்; கல்லூரி மாணவருக்கு, 75 ரூபாயிலிருந்து, 125 ரூபாய் என, உயர்த்தி நிதி ஒதுக்க, முடிவு செய்யப்பட்டதாகதெரிகிறது.மேலும், பண்டிகை நாட்களுக்கு, இனிப்பு வழங்க, பள்ளி மாணவருக்கு, 2 ரூபாயிலிருந்து, 20 ரூபாயாகவும், கல்லூரி மாணவருக்கு, 3 ரூபாயிலிருந்து, 30 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என, தெரிகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி