அரசு கலை, அறிவியல் கல்லூரி பேராசிரியர் இடமாறுதலுக்கானபொது கலந்தாய்வு, நேற்று துவங்கியது. தமிழ், இந்தி, வணிகவியல், பொருளாதாரம், உளவியல் உள்ளிட்ட, பாட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடந்தது.தமிழகத்தில், 62 அரசு கல்லூரிகளில், 5,000க்கும் மேற்பட்ட பேராசிரியர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கான, பணியிட மாறுதலை, பொது கலந்தாய்வு மூலம் மேற்கொள்ள, 10 ஆண்டுக்கு முன், அரசு நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும், பொது கலந்தாய்வு முறையில், இடமாறுதல் நடந்து வருகிறது.நடப்பாண்டிற்கான பேராசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு, நேற்று (5ம் தேதி), சென்னை, ராணிமேரி கல்லூரியில் நடந்தது. கலந்தாய்வில், பல மாவட்டங்களில் இருந்து வந்த பேராசிரியர்கள் பங்கேற்றனர்.முதல் நாளான நேற்று, தமிழ், இந்தி, வணிகவியல், பொருளாதாரம், உளவியல் உள்ளிட்ட, பாட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடந்தது. கலந்தாய்வில் பங்கேற்க, 264 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 113 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். கலந்தாய்வு முடிவில், 94 பேர், தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளுக்கு, இடமாறுதல்களை பெற்றனர்.இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குனர் செந்தமிழ் செல்வி கூறியதாவது: நடப்பு கல்வியாண்டிற்கான கலந்தாய்வில் கலந்து கொள்ளமொத்தம், 754 பேர் இடமாறுதல் கேட்டு விண்ணப்பித்து உள்ளனர்.வரலாறு, புவியியல், புள்ளியியல், மின்னணுவியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பாட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நாளை (இன்று) நடைபெற உள்ளது. இக்கலந்தாய்வில், 148 பேர் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
Aug 6, 2013
கல்லூரி பேராசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு: முதல் நாளில் 150 பேர் ஆப்சென்ட்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி