1,690 பள்ளிகளுக்கு விரைவில் புதிய கட்டணம் நிர்ணயம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 6, 2013

1,690 பள்ளிகளுக்கு விரைவில் புதிய கட்டணம் நிர்ணயம்.

விரைவில், 1,690 தனியார் பள்ளிகளுக்கு, புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படும்" என, தனியார் பள்ளி கட்டண நிர்ணய குழு தலைவர் சிங்காரவேலு கூறினார்.அவர் நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த ஜூன் மாதம் முதல், 10,550 பள்ளிகளுக்கு, புதிய கட்டணம் நிர்ணயித்து, அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். புதிய கட்டண விவரங்களை, பள்ளி அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என, நிர்வாகிகளிடம் கூறியிருந்தோம். ஆனால், பல பள்ளிகள், புதிய கட்டண விவரங்களை வெளியிடவில்லை என, புகார் வந்துள்ளது.அதேபோல், சில பள்ளிகள், நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிக கட்டணம் வசூலித்தாகவும் புகார்கள் வந்தன. புகார் வரும் பள்ளிகள் மீது, விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம்.இன்னும், 1,690 பள்ளிகளுக்கு, புதிய கட்டணம் நிர்ணயிக்க வேண்டியுள்ளது. இந்த பள்ளிகளுக்கு, இருமுறை அழைப்பு விடுத்தபோதும், அவர்கள் வரவில்லை. தற்போது, மீண்டும், நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இன்று (நேற்று) முதல், தொடர்ந்து விசாரணை நடக்க உள்ளது.செப்டம்பர் இறுதியிலோ அல்லது அக்டோபர் முதல் வாரத்திலோ, இந்த பள்ளிகளுக்கு, புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படும். இவ்வாறு, சிங்காரவேலு கூறினார்.இதற்கிடையே, மூன்றாவது கட்ட புதிய கட்டண விவரங்களை, கட்டண நிர்ணய குழு, நேற்று, தமிழக அரசு இணையதளத்தில் வெளியிட்டது. இதில், ஒவ்வொரு மாவட்ட வாரியாக, புதிய பள்ளிகளுக்கு, புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. நடப்பு கல்வி ஆண்டு முதல், மூன்று கல்வி ஆண்டுகளுக்கு சேர்த்து, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி