கல்லூரி பேராசிரியர் இடமாறுதல் கலந்தாய்வில், 210 பேர், இடமாறுதல்களை பெற்றனர்.தமிழகத்தில், 62 அரசு கல்லூரிகளில், 5,000க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு, ஒவ்வொருஆண்டும் பொது கலந்தாய்வு முறையில், இடமாறுதல் நடக்கிறது. நடப்பாண்டிற்கான கல்லூரி பேராசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு, 5ம் தேதி துவங்கி, 8ம் தேதி முடிவடைகிறது.விருப்பப்பட்ட கல்லூரிகளில் இடமாறுதல்களை பெற, சென்னை, ராணி மேரி கல்லூரியில், பல மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பேராசிரியர்கள் குவிந்தனர். முதல் நாள் கலந்தாய்வு முடிவில், 94 பேரும், இரண்டாம் நாள் கலந்தாய்வு முடிவில், 47 பேரும் இடமாறுதல்களை பெற்றனர்.இந்நிலையில், மூன்றாவது நாளாக நேற்று, இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல் உள்ளிட்ட பாட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடந்தது. இதற்கு, 191 பேர் விண்ணப்பித்திருந்தனர். 121 பேர் கலந்தாய்வில் கலந்து கொண்டனர். கலந்தாய்வு முடிவில், 69 பேர் இடமாறுதல்களை பெற்றனர்.இதுகுறித்து, கல்லூரி கல்வி இயக்குனர் செந்தமிழ் செல்வி கூறுகையில், "கல்லூரி பேராசிரியர்களுக்கான மூன்று நாள் கலந்தாய்வு முடிவில், 210 பேர் இடமாறுதல்களை பெற்றுள்ளனர்" என்றார்.
Aug 8, 2013
210 கல்லூரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி