ரூ.26.39 கோடி செலவில் 5 புதிய ஐ.டி.ஐ.,க்கள்: முதல்வர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 8, 2013

ரூ.26.39 கோடி செலவில் 5 புதிய ஐ.டி.ஐ.,க்கள்: முதல்வர் உத்தரவு.

ஐந்து புதிய ஐ.டி.ஐ.,க்களை, 26.39 கோடி ரூபாய் செலவில், இந்த கல்வியாண்டிலேயே துவக்க, முதல்வர் ஜெயலலிதா, உத்தரவிட்டு உள்ளார்.தமிழகத்தில், தற்போது, 62 அரசு ஐ.டி.ஐ.,க்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்க, மாணவ, மாணவியர் அதிகளவில் விண்ணப்பித்து வருகின்றனர். இத்தகைய தொழிற்பயிற்சி நிலையங்கள் கூடுதலாகத் துவங்கப்பட வேண்டிய அவசியத்தைக் கருத்தில் கொண்டு, ஐந்து புதிய ஐ.டி.ஐ.,க்கள் துவங்க, முதல்வர் ஜெயலலிதா, உத்தரவிட்டு உள்ளார்.இதன்படி, தூத்துக்குடி - வேப்பலோடை, தேனி - போடி, தஞ்சாவூர் -திருவையாறு, திருநெல்வேலி - ராதாபுரம், விருதுநகர் - அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில், ஐ.டி.ஐ.,க்கள், 26.39 கோடிரூபாயில் துவக்கப்பட உள்ளன. நடப்பாண்டிலேயே, இவை செயல்படத் துவங்கும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி