ஊரக வளர்ச்சித் துறையில் 3,000 காலிப் பணியிடங்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 16, 2013

ஊரக வளர்ச்சித் துறையில் 3,000 காலிப் பணியிடங்கள்.

தமிழக ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள, 3,000 காலிப்பணியிடங்களை, நிரப்ப வேண்டும்" என இத்துறை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.ராமநாதபுரத்தில், அவர் கூறியதாவது: ஊரக வளர்ச்சித் துறையில் சாலை ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர் என, 1,500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. நூறு நாள் வேலை திட்டம், தாய்திட்டம், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., நிதி மேம்பாட்டு திட்டம்,ஊராட்சி ஒன்றிய பொது நிதி வேலைகள் போன்ற திட்டத்திற்காக, அரசு அனுமதித்துள்ளதில், 1,500 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த 3,000 காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், 265 ஊராட்சிகளில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 7 ஆண்டுகள் வரை நடைபெறும் இத்திட்டத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதில் வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு பதவி உயர்வு மூலம் பணி வழங்க வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி