பி.எட். கலந்தாய்வு: இரண்டு நாள்களில் 4,000 விண்ணப்பங்கள் விநியோகம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 13, 2013

பி.எட். கலந்தாய்வு: இரண்டு நாள்களில் 4,000 விண்ணப்பங்கள் விநியோகம்.

பி.எட்., மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு கடந்த இரு தினங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 21 கல்லூரிகளில் 13 பாடப் பிரிவுகளின் கீழ் 2,118 பி.எட்., இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் 2013-14 ஆம்கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள லேடி விலிங்டன் ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் ஆகஸ்ட் இறுதி வாரத்தில் நடைபெறுகிறது.இதற்கான விண்ணப்ப விநியோகம் வெள்ளிக்கிழமை (ஆக.9) தொடங்கியது. ஆகஸ்ட் 16-ஆம் தேதி மாலை 3 மணி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. கடந்த இரு தினங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து தமிழ்நாடு பி.எட்., சேர்க்கை செயலர் ஜி. பரமேஸ்வரி கூறியது:பி.எட். கலந்தாய்வுக்காக மொத்தம் 13,000 விண்ணப்பங்கள்அச்சடிக்கப்பட்டுள்ளன. விண்ணப்ப விநியோகம் தொடங்கிய இரு தினங்களில் சுமார் 4,000 விண்ணப்பங்கள் வரை விநியோகிக்கப்பட்டுள்ளன.உதவி மையங்கள்: விண்ணப்பங்களை பெற்றுச் செல்லும் மாணவர்களில்சிலருக்கு, விண்ணப்பத்தை சரிவர பூர்த்தி செய்யத் தெரிவதில்லை.எனவே, விண்ணப்பத்தை தவறின்றி பூர்த்தி செய்ய உதவும் வகையில், அனைத்து விண்ணப்ப விநியோக மையங்களிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையத்தில் சுழற்சி முறையில் இரண்டு பேராசிரியர்கள் இடம்பெற்றிருப்பர்.மேலும், இந்த இரண்டு தினங்களில் 50 பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் மட்டுமே வந்து சேர்ந்துள்ளன.விண்ணப்பதாரர்கள், அரசு சான்று பதிவுபெற்ற அதிகாரியிடம் சான்றிதழ் நகல்களில் கையொப்பம் வாங்க வேண்டியது கட்டாயம் என்பதால் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக தெரிகிறது.மாணவர்கள், விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும்போதே அரசு அதிகாரியின் கையொப்பத்துடன் கூடிய சான்றிதழ் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் சான்றிதழ் நகல்களை இணைத்து அனுப்பிவிட்டு, பின்னர் கலந்தாய்வில் பங்கேற்கும்போது அரசு சான்று பதிவுபெற்ற அதிகாரியின் கையொப்பமிட்ட சான்றிதழ் நகல்களை சமர்ப்பித்தால் போதுமானது என்றார் அவர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி