அரசு உதவி பெறும் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு அறிவித்து ஓராண்டாகியும், இதுவரை 25 சதவீதப் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு உள்ளன.தமிழகத்தில் 133 அரசு உதவி பெறும் கல்லூரிகளில், லட்சக்கணக்கான மாணவர்கள் பயில்கின்றனர். 2007ல் இருந்து இக்கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இந்நிலையில், "2006 - 12ம் ஆண்டு வரைஅரசு உதவி பெறும் கல்லூரிகளில் காலியாக உள்ள, 3,120 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்” என தமிழக அரசு அறிவித்து, 2012 மே மாதம் அரசாணை வெளியிட்டது.பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளின் படி, பிஎச்.டி., பட்டம்பெற்றவர் அல்லது எம்.பில்., பட்டத்துடன், ”நெட், ஸ்லெட்” தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டது. முன்பு உதவிப் பேராசிரியர் பணியிடங்களை அந்தந்தக் கல்லூரி நிர்வாகங்களே நிரப்பி வைந்த நிலையில், தற்போது உதவிப் பேராசிரியர் நியமனத்திற்குப் புதிய முறையை அரசு அறிமுகப்படுத்தியது.அதில் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் காலி பணியிடங்கள் நிலை குறித்து அறிய, கல்லூரி கல்வி இணை இயக்குனர் மற்றும் இரண்டு அரசு கல்லூரி முதல்வர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு, கல்லூரியில் உள்ள உண்மை நிலையைக் கண்டறியும். பின், உதவிப் பேராசிரியர் தேர்வை ஆய்வு நடத்தி அரசுக்கு அறிக்கை அளிக்கும்.ஆனால், இக்குழு அமைக்கப்பட்டு ஓராண்டாகியும் இதுவரை பணியிடங்கள்நிரப்பப்படவில்லை. மொத்தமுள்ள 3,120 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில், 22 கல்லூரிகளில் உள்ள 500க்கும் குறைவான பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு உள்ளன. தற்போது நிலவரப்படி அரசு உதவி பெறும் கல்லூரிகளில், 30 சதவீதப் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆசிரியர் பற்றாக்குறையால் பெரும்பாலான கல்லூரிகளில் வகுப்புகள் நடைபெறுவது இல்லை.
Aug 21, 2013
ஓராண்டில் 500 உதவிப்பேராசிரியர் பணியிடங்களே நிரம்பியது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி