இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்காக, நடப்பாண்டு, 5.65 லட்சம் மடிக்கணினி வாங்க, எல்காட் நிறுவனம் சார்பில், டெண்டர் விடப்பட்டு உள்ளது.சட்டசபை தேர்தலின் போது, "அ.தி.மு.க., வெற்றி பெற்று, ஆட்சிக்குவந்தால், பிளஸ் 2 மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு, இலவசமாகமடிக்கணினி வழங்கப்படும்" என ஜெயலலிதா அறிவித்தார்.அதன்படி, அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும், முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, மாணவ, மாணவியருக்கு, இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். மடிக்கணினி, எல்காட் நிறுவனம் சார்பில் வாங்கப்பட்டு, கல்வித் துறை மூலம், மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.அதேபோல், கோவில் செயல் அலுவலர்களுக்கும், மடிக்கணினி வழங்கப்பட்டு உள்ளது. இத்திட்டங்களுக்காக, 2011-12, 8.98 லட்சம், கடந்த ஆண்டு, 7.55 லட்சம் மடிக்கணினிகள் வாங்கப்பட்டன. நடப்பாண்டுக்கு, 5.65 லட்சம் மடிக்கணினி வாங்கமுடிவு செய்யப்பட்டு, எல்காட் நிறுவனம் சார்பில், டெண்டர் விடப்பட்டுள்ளது.டெண்டர் விண்ணப்பப் படிவங்கள், சென்னை நந்தனம் பகுதியில் உள்ள, எல்காட் மேலாண் இயக்குனர் அலுவலகத்தில், அடுத்த மாதம், 3ம் தேதி வரை வழங்கப்படும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, செப்., 4ம் தேதிக்குள் வழங்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி