பரமக்குடியில் டி.இ.டி., தேர்வு வினாத்தாள் வினியோகத்தில் ஏற்பட்ட குளறுபடி குறித்து கல்வி துறையில் விசாரித்து வருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ராஜா சேதுபதி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் டி.இ.டி., முதல்நாள் தேர்வு தொடங்கியது. ஒருஅறையில் கண்காணிப்பாளர் முதுகுளத்தூர் அருகே உள்ள அலங்கானூரை சேர்ந்த ஆசிரியை மகாதேவி வினாத்தாள்களை வழங்கினார். ஒரு மணி நேரத்திற்கு பின் பள்ளி தலைமை ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் பார்வையிட வந்தபோது, ஏ.பி.சி.டி., என்ற அடிப்படையில் இருந்த வினாத்தாள் வரிசை மாற்றி கொடுக்கப்பட்டிருந்ததை கண்டு, மாவட்ட கல்வி அலுவலர் பழனியாண்டிக்கு தகவல் கொடுத்தார்.இதுபோல் மாறிகொடுத்ததால், பார்த்து எழுத வசதியாக இருக்கும் என்றசர்ச்சை எழுந்தது. பின் இதுகுறித்து சென்னையில் வாரிய உறுப்பினர் அறிவொளிக்கு தகவல் கொடுத்ததின் பேரில், அவரது உத்தரவின்படி, சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் தவறு நடந்தது குறித்துஎழுதி வாங்கி கொண்டனர்.இதனால், இரண்டாம் தாள் தேர்வுக்கு சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு கண்காணிப்பு பணி வழங்கக்கூடாது, என சென்னையிலிருந்து உத்தரவு வந்தது.இதுகுறித்து பரமக்குடி மாவட்ட கல்வி அலுவலர் பழனியாண்டி கூறியதாவது: தேர்வில் எந்த குளறுபடியும் நடக்கவில்லை. ஆசிரியருக்கு வேறு அலுவல் காரணமாக இரண்டாம் தாள் தேர்வு பணிக்குவராமல் இருந்திருக்கலாம் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி