தமிழகம் முழுவதும் 4340 அரசு பள்ளிகளில் "தகவல் தொழில்நுட்ப கல்வி கற்பிக்கும் திட்டம்" செயல்படுத்தும் பணிகள் துரிதபடுத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்துக்காக, தமிழகத்துக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை 86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.தமிழகத்தில் 4,574 உயர்நிலைப் பள்ளி, 5,030 மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. நடப்பு கல்வியாண்டில் இதில் 4,340 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் "தகவல் தொழில்நுட்ப கல்வி கற்பித்தல் திட்டம்" அறிமுகப்படுத்தப்பட உள்ளது.மாணவர்களின் மொழித்திறன், கல்வித்தரத்தை மேம்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தகவல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில், கோடிக்கணக்கான ரூபாய் செலவில், மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் கம்ப்யூட்டர் வழங்கப்பட்டு வருகிறது.தொழில்நுட்ப கல்வி அளிக்க, ஒரு பள்ளிக்கு உத்தேச நிதியாக (மாணவர்களின் எண்ணிக்கை சார்ந்து) ரூபாய் 19 லட்சம் வீதம், மொத்தம் 86 கோடி ரூபாய் நிதியை, தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அனைத்து தளவாட பொருட்களும் வாங்கப்படவுள்ளது. ஐந்தாண்டுஒப்பந்த அடிப்படையில் மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி