கண்காணிப்பு கேமரா பொருத்த மெட்ரிக் இயக்குனரகம் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 13, 2013

கண்காணிப்பு கேமரா பொருத்த மெட்ரிக் இயக்குனரகம் உத்தரவு.

அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும், மாணவர்கள் பாதுகாப்பு கருதி, கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவன் சூர்யாவை, சில தினங்களுக்கு முன், ஒரு கும்பல் கடத்திச் சென்றது. போலீசார், தீவிர நடவடிக்கைக்குப் பின், சிறுவன் மீட்கப்பட்டான்.இந்த சம்பவம், பெற்றோர் மத்தியில், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மாணவர்கள் பாதுகாப்பு கருதி, அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும், கண்காணிப்பு கேமராக்களைபொருத்த வேண்டும் என, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க பொதுச்செயலர், நந்தகுமார் கூறுகையில், ""பெரும்பாலான தனியார் பள்ளிகளில், கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, முன்னணி தனியார் பள்ளிகளில், அனைத்து இடங்களிலும், கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.கேமராக்கள் பொருத்தாத பள்ளிகளில், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது,'' என, தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி