ஆசிரியர் தகுதித் தேர்வில், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு, தகுதி மதிப்பெண்களில், சலுகை வழங்கக் கோரி, மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, அரசுக்கு, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.மத்திய - மாநில அரசுகளில் பணியாற்றும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஊழியர் சம்மேளனத்தின் நிறுவனர் கருப்பையா என்பவர், தாக்கல் செய்த மனு:ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற, ஒருவர், 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் வெளியிட்டுள்ள வழிமுறைகளின்படி, ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, தகுதி மதிப்பெண்ணில் சலுகை வழங்கலாம்.தேசிய கவுன்சிலின் வழிமுறைப்படி, ஆந்திராவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தகுதி மதிப்பெண், 40 சதவீதம்; ஒடிசாவில், 50 சதவீதம்; உத்தர பிரதேசத்தில், 55 சதவீதம்; மணிப்பூரில், 50 சதவீதம் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் தான், ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலின் வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை.ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என, இட ஒதுக்கீட்டின் கீழ் வருவோருக்கு, தகுதி மதிப்பெண்ணில், சலுகை வழங்கப்படவில்லை. ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து, கடந்த, மே மாதம், ஆசிரியர் தேர்வு வாரியம் விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதில், இடஒதுக்கீட்டில் வருவோருக்கு, தகுதி மதிப்பெண்களில் எந்த சலுகையும் வழங்கவில்லை.அவர்களுக்கு சலுகை வழங்கக் கோரி, கடந்த, ஏப்ரல் மாதம் மனுக்கள் அனுப்பினேன்.ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள, தகுதித் தேர்வு தொடர்பான நடவடிக்கைகளுக்கு, தடை விதிக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் கீழ் வருவோருக்கு, தகுதி மதிப்பெண்ணில் சலுகை வழங்க, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, தலைமை நீதிபதி(பொறுப்பு) அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய, முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க, கல்வித்துறை சார்பில், சிறப்புஅரசு பிளீடர் கிருஷ்ணகுமார், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில்,கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி, நோட்டீஸ் பெற்றுக் கொண்டனர். விசாரணை, செப்., 19ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி