டி.இ.டி., வினாத்தாள் மோசடி: முக்கிய குற்றவாளிகளை நெருங்கும் போலீஸ். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 19, 2013

டி.இ.டி., வினாத்தாள் மோசடி: முக்கிய குற்றவாளிகளை நெருங்கும் போலீஸ்.

டி.இ.டி., வினாத்தாள் மோசடியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளை தனிப்படை போலீஸார் நெருங்கி வருகின்றனர்.டி.இ.டி., வினாத்தாள் மோசடி தொடர்பாக, தளியை சேர்ந்த அசோக்குமார் என்பவர் எஸ்.பி.,ஆஸ்ரா கர்க்கிற்கு கொடுத்த தகவலின்பேரில், தனிப்படை டி.எஸ்.பி., பரமேஸ்வரா தலைமையிலான போலீஸார், உத்தனபள்ளி டாஸ்மாக் கண்காணிப்பாளர் கணபதி, 39 அவரது மனைவி எஸ்டர், 33 ஓசூர் அடுத்த காமன்தொட்டியை சேர்ந்த கிருஷ்ணப்பா, 42, ஓசூர் அடுத்த பஸ்தியை சேர்ந்த சாக்ஷி தெலுங்கு நாளிதழ் நிருபர் சந்திரசேகர், 33 பாலக்கோட்டை அடுத்த ஜக்கசமுத்திரத்தைசேர்ந்த டாஸ்மாக் விற்பனையாளர் அசோகன், 37 மற்றம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த இருளப்பட்டை சேர்ந்த தர்மபுரி வருவாய்த்துறை பயிற்சி பெற்று வரும் இளையராஜா, 30 ஆகிய, ஆறு பேரை நேற்று முன்தினம் கைது செய்து அவர்களிடம் இருந்து, ஏழு லட்சத்து, 80 ரூபாயை பறிமுதல் செய்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில், வினாத்தாள் மோசடியில், பென்னாகரம் மற்றும் ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களுக்குதொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸார் பென்னாகரம் மற்றும் ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், மோசடி தொடர்பாக, கைது செய்யப்பட்ட கணபதி, எஸ்டர், கிருஷ்ணப்பா, சந்திரசேகர், அசோகன், இளையராஜா ஆகியோரின் மொபைல்ஃபோன்களில் கடந்த, ஒரு வாரமாக பேசியவர்களின் விபரங்கள் மற்றும் என்ன பேசினார்கள் என்ற விபரங்களையும், தனிப்படை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.டி.இ.டி., வினாத்தாள் மோசடியில் ஈடுபட்டுள்ள முக்கிய குற்றவாளிகளை தனிப்படை போலீஸார் நெருங்கி வருதாக, போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், டி.இ.டி., வினாத்தாள் மோசடியில் கைது செய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் கணபதி, அசோகன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்யவும், குருப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று, வருவாய்த்துறையில் பயிற்சி பெறும் இளையராஜா மீது துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி