"பி.எட்., மதிப்பெண் பட்டியல்களை, மண்டல மையங்களில் நாளை பெற்று கொள்ளலாம்' என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இதுகுறித்து, பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் கூறியதாவது::தமிழகத்தில், ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 600க்கும் மேற்பட்ட தனியார் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. இவற்றுக்கான தேர்வு மே மாதம்நடந்தது. இத்தேர்வை, 68, 800 பேர் எழுதினர்.இதில்,, 94 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இம்மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் மற்றும் தற்காலிக தேர்ச்சி சான்றிதழ்களை,நாளை (17ம் தேதி) மண்டல மையங்களில் பெற்று கொள்ளலாம்.ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்ட கல்லூரிகள், கோவை, என்.ஜி.டி., கல்வியியல் கல்லூரியிலும்; நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், பெரம்பூர், கரூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட கல்லூரிகள், திருச்சி, ஜமால் முகமது கல்வியியல் கல்லூரியிலும் பெற்று கொள்ளலாம். தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம் மாவட்ட கல்லூரிகள், சேலம், பத்மாவதி கல்வியியல் கல்லூரியிலும்; திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, மதுரை மாவட்ட கல்லூரிகள், மதுரை, தூய செயின்ட் ஜெஸ்டின் கல்வியியல் கல்லூரியிலும் பெற்று கொள்ளலாம்.கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை மாவட்ட கல்லூரிகள், நெல்லை, செயின்ட் இனிஷியேஸ் கல்வியியல் கல்லூரியிலும்; திருவள்ளூர், காஞ்புரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சென்னை மாவட்ட கல்லூரிகள்,சென்னை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திலும் பெற்று கொள்ளலாம்.இவ்வாறு, விஸ்வநாதன் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி