டி.ஆர்.பி., புதிய தலைவராக பதவியேற்றார் விபு நய்யார். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 4, 2013

டி.ஆர்.பி., புதிய தலைவராக பதவியேற்றார் விபு நய்யார்.

டி.ஆர்.பி., புதிய தலைவராக, விபு நய்யார், பதவியேற்றார்.டி.ஆர்.பி., தலைவர் பதவியில், இரண்டு ஆண்டுகளாக இருந்து வந்த சுர்ஜித் சவுத்ரி, மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டு, தேசிய சிறுபான்மை ஆணையத்தின் செயலராக நியமிக்கப்பட்டார்.இதையடுத்து, நேற்று முன்தினம், டி.ஆர்.பி., பதவியில் இருந்து, விடை பெற்றார். இவரது காலத்தில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குறைந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களைக் கொண்டு, ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் பங்கேற்ற டி.இ.டி., தேர்வை, வெற்றிகரமாக நடத்தினார்.இரு டி.இ.டி., தேர்வுகள், முதுகலை ஆசிரியர் தேர்வு உட்பட, பல வகையான தேர்வுகளை, வெற்றிகரமாக நடத்தினார். டி.ஆர்.பி., புதிய தலைவராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி விபு நய்யார், நேற்று முன்தினம், பதவி ஏற்றுக் கொண்டார்.வரும், 17, 18ம் தேதிகளில் நடக்க உள்ள டி.இ.டி., தேர்வு, புதிய தலைவர் மேற்பார்வையில் நடக்க உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி