இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சனை : அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக இயக்குனர் உறுதி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 4, 2013

இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சனை : அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக இயக்குனர் உறுதி.

03.08.2013 அன்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்கள் புதிதாய் பொறுப்பேற்ற தொடக்க கல்வி இயக்குநர் முனைவர் திரு. இளங்கோவன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நபர் குழுவின் பாராபட்ச போக்கை - விரிவாக நிதி இழப்புடன் எடுத்துக் கூறினர்.கனிவுடன் பொறுமையாக கேட்ட இயக்குநர், அரசின் பார்வைக்கு இப்பிரச்சனைகளை எடுத்து செல்வதாக உறுதி அளித்தார். மேலும் ஆசிரியர்களின் பிரச்சனை சார்பாக தங்கள் கோரிக்கைகளை உடனுக்குடன் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார். புதிய இயக்குநரின் அணுகுமுறை திருப்தி அளிப்பதாக தலைமை நிலைய செயலாளர் திரு. க.சாந்தக்குமார் தெரிவித்தார் - தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி