இரு அதிகாரிகளின் பணியிட மாற்றம், டி.இ.டி., தேர்வுக்குப் பின் அமலுக்கு வரும் என, பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதா தெரிவித்துள்ளார். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 13, 2013

இரு அதிகாரிகளின் பணியிட மாற்றம், டி.இ.டி., தேர்வுக்குப் பின் அமலுக்கு வரும் என, பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதா தெரிவித்துள்ளார்.

வரும், 17, 18ம் தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடக்கிறது.இதை, ஏழு லட்சம் பேர் எழுதுகின்றனர். இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளை கவனிக்கும் பணிகளில், டி.ஆர்.பி., அதிகாரிகள் மட்டுமில்லாமல், கல்வித் துறை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இந்நிலையில், டி.ஆர்.பி.,யில் உறுப்பினர்களாக பணியாற்றி வரும், வர்மா மற்றும் உமா, முறையே, மெட்ரிக் பள்ளிகள் மற்றும்தேர்வுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். டி.இ.டி., தேர்வுப் பணிகளில், இரு அதிகாரிகளும் ஈடுபட்டிருப்பதால், திடீரென, பணியிட மாற்றம் செய்ய வேண்டாம் எனவும், டி.இ.டி., தேர்வுக்குப் பின், இவர்கள், புதிய துறையில் சேரலாம் எனவும், பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதா தெரிவித்துள்ளார். எனவே, இவர்கள் இருவர் தவிர, மற்ற, 10 இணை இயக்குனர்களும், உடனடியாக, புதிய பணியிடங்களில் சேர முடிவு எடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி