வி.ஏ.ஓ., தேர்வில் மீதமான வினாத்தாள்கள் அனைத்தும், வாசகர் வசதிக்காக அனைத்து நூலகத்துக்கும் பிரித்து அனுப்ப, மாவட்ட கலெக்டர் சண்முகம் உத்தரவிட்டார்.தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம், காலிப்பணியிடங்களுக்கேற்ப போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதன்படி கடந்தாண்டு செப்., 30ல் வி.ஏ.ஓ.,க்கள் பதவிக்கான போட்டித்தேர்வு தமிழகம் முழுவதும் நடந்தது.ஈரோடு மாவட்டத்தில் நடந்த இப்பதவிக்கான எழுத்துத்தேர்வில் வினாத்தாள்கள் ஆயிரக்கணக்கில் மீதமாகின. மாவட்ட கருவூலம் கட்டுப்பாட்டில், இந்த வினாத்தாள்கள் பண்டல்களாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இந்த வினாத்தாள்களை, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து நூலகத்துக்கும் அனுப்பி வைக்க, மாவட்ட கலெக்டர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, 20க்கும் மேற்பட்ட பண்டல்கள், ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. அந்த பண்டல்களை பித்து மாவட்டத்தில் உள்ள கிளை நூலகம் வாரியாக பிரித்து அனுப்பும் பணி தீவிரமாக நடக்கிறது. போட்டி தேர்வுக்கு படிப்பவர்களுக்கு அதிக பயன்தரும் என்பதால், அவற்றை விரைவாக நூலகங்களுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி