தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் பணியிடத்தை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடற்கல்வி ஆசிரியர்கள் சென்னையில் சனிக்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் - உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்தில் மாநில தலைவர் டி.ரவிச்சந்தர், பொதுச்செயலாளர் டி.தேவி செல்வம், தலைமை நிலையச் செயலாளர் ஆர்.சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கிரேட்-1, கிரேட்-2 உடற்கல்வி பணியிடங்களை உயர்த்த வேண்டும், உடற்கல்விக்குப் பாடப்புத்தகம் வழங்க வேண்டும், உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் எம்.பில். ஊக்க ஊதியம் வழங்க வேண்டும், இணை இயக்குநர் - உடற்கல்வி பணியிடத்தை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி