மேலூர் அருகே பூதமங்கலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு 11ஆண்டுகளாக வேறு இடத்தில் சத்துணவு சமைக்கப்பட்டு, தள்ளுவண்டியில் கொண்டு வந்து கொடுக்கப்படுகிறது. இதனால், பல நேரங்களில் உணவை எதிர்பார்த்து மாணவர்கள் காத்திருக்கும் அவலம் உள்ளது.பூதமங்கலம் ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. போதிய வகுப்பறைகள் இல்லாததால், இதே ஊராட்சியில் உள்ள மணியம்பட்டியில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன. பழைய கட்டடத்தில் ஐந்தாம் வகுப்பு வரையும், புதிய கட்டடத்தில் 6,7,8ம் வகுப்புகளும் செயல்பட துவங்கியது.இரு இடங்களில் பள்ளி செயல்பட்டாலும், இது ஒரு பள்ளி கணக்கில் இருப்பதால் சத்துணவு கூடம் ஒரு இடத்தில் மட்டுமே செயல்படுகிறது.இரு பள்ளிகளுக்கும் இடையில் ஒரு கி.மீ., தூரம் உள்ளதால், மாணவர்கள் அங்கு செல்ல முடியாத நிலை.இதனால், பூதமங்கலத்தில் சமையல் செய்து, தள்ளுவண்டியில் எடுத்து வந்து மணியம்பட்டியில் உள்ள மாணவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.தலைமை ஆசிரியர் குணசேகரன் கூறியதாவது: பூதமங்கலம் பள்ளியில் 83 மாணவர்களும், இங்குள்ள பள்ளியில் 57 மாணவர்களும் படிக்கின்றனர். ஒரு சத்துணவு அமைப்பாளர், ஒரு சமையலர் மட்டும் பணியில் உள்ளனர். அப்பள்ளியில் போதிய இடவசதி இல்லை. ஆனால், இங்கு கூடுதல் வகுப்பறைகள் உள்ளன.அங்குள்ள மாணவர்களை இங்கு மொத்தமாக மாற்றிவிட்டால், மதிய உணவு பிரச்னை இருக்காது. அல்லது இப்பள்ளியை தரம் உயர்த்தி 10ம் வகுப்பு வரை கொண்டு வந்துவிட்டு, அங்குள்ள பள்ளியை துவக்கப்பள்ளியாக மட்டும் செயல்படுத்தினால் பிரச்னை தீரும், என்றார். சத்துணவு வழங்குவதில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படும் நிலையில், ஒரு கி.மீ., தூரம் தள்ளுவண்டியில் உணவு கொண்டுவரும் போது, பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீர்வு காண வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி