ஈரோட்டில் நடந்த தேசிய அறிவியல் கருத்தரங்கம் சார்பில் நடந்த போட்டியில் பங்கு பெறுவோருக்கு, முன் அறிவிப்பு செய்யாததால், போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்கள் பட்டினியாக திரும்பி சென்றனர்.ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு, கோபி என இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. நடப்பாண்டில் கல்வி பயிலும், எட்டு முதல் எஸ்.எஸ்.எல்.ஸி., வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களின், அறிவியல் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையில், மும்பை நேரு அறிவியல் மையம் சார்பில், தேசிய அறிவியல் கருத்தரங்கம், கல்வி மாவட்ட அளவில் நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.அதன்படி, ஈரோடு கல்வி மாவட்டத்துக்கான நிகழ்ச்சி, ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. நீர் மேலாண்மை பிரச்னை மற்றும் சவால்கள் என்ற தலைப்பில் நடந்த பேச்சுப்போட்டியில், அறிவியல் ஆசிரியர்கள் நடுவராக இருந்தனர்.போட்டிக்காக, ஈரோடு கல்வி மாவட்டத்தை சேர்ந்த மொத்தம், 110 மாணவ, மாணவியர்கள் வந்திருந்தனர். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்கள் எவ்வாறு தங்களை தயார் செய்து வரவேண்டும், என்ற அறிவிப்பை கல்வித்துறை அறிவுறுத்த தவறியது.இதனால், போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்கள், காலை உணவு கூட எடுக்காமல் வந்திருந்தனர். தவிர மதிய உணவும் எடுத்த வர கல்வித்துறை அறிவுறுத்தாமல் இருந்தது.இதனால் பல மாணவ, மாணவியர்கள் ஈரோடு எஸ்.பி., ஆஃபீஸில் உள்ள கேன்டினில் மதிய உணவு வாங்கி உண்டனர். மதியம், 1 மணிக்குள் போலீஸ் கேன்டீனில் உணவு முழுவதும் விற்று தீர்ந்ததால், பல மாணவ,மாணவியர்கள் பட்டினியாக திரும்பி சென்றனர்.இதுகுறித்து போலீஸ் கேன்டீனில் சாப்பிட்ட மாணவியர்கள் கூறியதாவது:போட்டியில் கலந்து கொள்ள மட்டும் அழைப்பு விடுத்து, அனைவரையும் நேரமாக அழைத்து வந்தனர். ஆனால் உணவு எடுத்துவர எங்களுக்கு யாரும் அழைப்பு விடுக்கவில்லை. இதனால் போலீஸ் கேன்டீனில் வாங்கிசாப்பிடுகிறோம், என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி