ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், டி.இ.டி., தேர்வு பணிகளை, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் புறக்கணித்துள்ள நிலையில், அப்பணிகளில் முழுமையாக ஈடுபடுவோம்" என பட்டதாரி ஆசிரியர் சங்கங்கள் கருத்து தெரிவித்து உள்ளன.ஆகஸ்ட் 17, 18ம் தேதி, டி.இ.டி., தேர்வுகள் நடக்கின்றன. இதற்கான பணி ஒதுக்கீட்டு முறையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு கீழ் முதுகலை ஆசிரியர்களுக்கு பணிகள் ஒதுக்கப்பட்டதால், தேர்வு பணிகளை புறக்கணிப்பதாக முதுகலை ஆசிரியர்கள் அறிவித்து உள்ளனர்.இந்த அறிவிப்பால், பட்டதாரி ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். மேலும், தேர்வு பணிகளில் முழுமையாக ஈடுபடுவதாகவும் கருத்து தெரிவித்து உள்ளனர்.தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் இளங்கோவன் தெரிவித்து உள்ளதாவது:
டி.இ.டி., தேர்வுகளுக்கு, இரு நாட்களே உள்ள நிலையில், முதுகலை ஆசிரியர்கள் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, தேர்வு எழுத உள்ளவர்களின் மனநிலையை பாதிக்கும்.அரசு நெறிமுறைக்கு ஏற்ப உரிய முறையில் பணிகளை ஒதுக்கி அறிவித்து உள்ளது. இதை முதுகலை ஆசிரியர்கள் புறக்கணித்தால், அவர்களுக்கும் சேர்ந்து அப்பணிகளை பட்டதாரி ஆசிரியர்களே முழுமையாக ஈடுபட்டு, தேர்வுகளை நடத்தி முடிக்க தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Aug 15, 2013
டி.இ.டி., தேர்வு பணிகளில் முழுமையாக ஈடுபடுவோம்: பட்டதாரி ஆசிரியர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி