இந்தியாவில் "பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப்" (ppp) முறையில் புதிதாக 300 பாலிடெக்னிக் கல்லூரிகளை தொடங்கவுள்ளதாக மத்திய மனிதவள இணை அமைச்சர் சசி தரூர் தெரிவித்தார்.ஒவ்வொரு பாலிடெக்னிக் கல்லூரியும், (கல்லூரிக்கான இடத்தை சேர்க்காமல்)15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படுகிறது. இதில் 3 கோடி ரூபாய் மத்திய அரசும், 2 கோடி ரூபாய் மாநில அரசும் வழங்கும். மீதமுள்ள 10 கோடி ரூபாய் தனியார் அமைப்பு வழங்க வேண்டும். கல்லூரிக்கான இடத்தை தனியார் அமைப்பு உருவாக்கி தர வேண்டும். மாநில அரசுகளும் குறிப்பிட்ட அளவில் நிலம் ஒதுக்கி தரவேண்டும்.இவ்வாறு உருவாக்கப்படும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் அட்மிஷன், அந்தந்த மாநில விதிமுறைகளின் படி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி