புகாரின்றி பணிபுரியும் 10 ஆயிரம் ஆசிரியர்கள், சம்பள உயர்வுக்கான அறிவிப்பு இதுவரை வெளியாகாததால் குழப்பத்தில் உள்ளனர்.ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடு குறித்து ஆய்வு செய்து, அறிக்கை அளித்த "மூன்று நபர் கமிஷன்" பரிந்துரைப்படி, பத்து ஆண்டுகள் புகாரின்றி பணியாற்றிய தேர்வுநிலை ஆசிரியர்களுக்கும், 20 ஆண்டுகள் பணியாற்றிய சிறப்பு நிலை ஆசிரியர்களுக்கும், 3 சதவீதமாக இருந்த ஊக்க சம்பளம் 6 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அரசு உதவி பெறும் பள்ளிகளில், அரசு முதுநிலை ஆசிரியர்கள் புகாரின்றி 30 ஆண்டுகளை கடந்து பணியாற்றும் "சூப்பர் கிரேடு" ஆசிரியர்களுக்கான ஊக்க சம்பளம் தொடர்பாக எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. மாநிலத்தில் 10 ஆயிரம்"சூப்பர் கிரேடு" (30 ஆண்டுகள் பணியாற்றிய) ஆசிரியர்கள் மனஅழுத்தத்தில் உள்ளனர். இதில் பெரும்பாலானோர் ஓய்வு வயதை எட்டியுள்ளனர்.மேல்நிலை முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சரவண முருகன் கூறியதாவது: ஆசிரியர்கள் சம்பள முரண்பாடுகளை களைய தமிழக அரசு இதுவரை 89 அரசாணைகள் வெளியிட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை சார்பில் மூன்று அரசாணைகள் வெளியிடப்பட்டன. இதில் அரசாணை 23ன் படி, தேர்வு நிலை, சிறப்பு நிலை ஆசிரியர்களுக்கு ஊக்க சம்பளம் அளிக்கப்பட்டது.ஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 30 ஆண்டுகள் புகாரின்றி பணியாற்றி, பதவி உயர்வு இல்லாத "சூப்பர் கிரேடு" ஆசிரியர்களுக்கு, "மூன்று நபர் கமிஷன்" பரிந்துரையின்படி ஊக்க சம்பளம் குறித்து அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. இந்நிலை அரசு மேல்நிலை பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கும் நீடிக்கிறது. கமிஷன் பரிந்துரை 30 ஆண்டுபணியாற்றிய ஆசிரியர்களுக்கும் பொருந்துமா? என அரசு விளக்கமளித்து குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி