டி.இ.டி., தகுதி மதிப்பெண் குறைக்க கோரி பார்வையற்ற பட்டதாரிகள் உண்ணாவிரதம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 8, 2013

டி.இ.டி., தகுதி மதிப்பெண் குறைக்க கோரி பார்வையற்ற பட்டதாரிகள் உண்ணாவிரதம்.

ஆசிரியர் தகுதி தேர்வில், பார்வையற்ற ஆசிரியர்கள் தகுதி பெற, 40 சதவீத மதிப்பெண்களை, குறைந்தபட்ச மதிப்பெண்களாகநிர்ணயிக்க வேண்டும்" என பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து இச்சங்க பொதுச் செயலர், வேல்முருகன் கூறியதாவது: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பார்வையற்றவர்களை மட்டுமே, இசை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். பார்வையற்ற, 350 பேருக்கு, கருணை அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர்களாக, தமிழ், வரலாறு மற்றும் ஆங்கில பாடங்களில் பணி அமர்த்த வேண்டும்.ஆசிரியர் தகுதி தேர்வில் பார்வையற்ற ஆசிரியர்கள் தகுதி பெற, 40 சதவீத மதிப்பெண்களை, குறைந்தபட்ச மதிப்பெண்களை நிர்ணயிக்க வேண்டும். பார்வையற்ற முதுகலை பட்டதாரிகளை, கல்லூரி உதவி பேராசிரியர்களாக நியமிக்க வேண்டும்.பார்வையற்றோர் சிறப்பு பள்ளிகளில் காலியாக உள்ள, ஆசிரியர் பணியிடங்களை, பார்வையற்றவர்களை கொண்டு விரைந்து நிரப்ப வேண்டும். பார்வையற்றவர்களுக்கு வழங்கப்படும் ஊர்திப்படி பெறுவதற்கு நடைமுறையிலுள்ள விதிமுறைகளை தளர்த்தி, பணி நியமனத்தின் போது சமர்ப்பிக்கப்படும் மருத்துவ சான்றிதழை அடிப்படையாக கொண்டு வழங்க வேண்டும்.வேலை இல்லாத பார்வையற்ற பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் தொகை, 450 ரூபாயில் இருந்து, 2,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (இன்று) கவர்னர்மாளிகை முன், ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி