ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் அரசு அறிவிக்கும் அகவிலைப்படி கணிசமான தொகையாக கிடைக்கிறது. இதை நிர்ணயிப்பதற்கென ஒரு பார்முலா உள்ளது. அதனடிப்படையில் கணக்கிட்டு 6 மாதங்களுக்கு ஒருமுறை அடிப்படை சம்பளம் வழங்குகின்றனர். கடந்த 12 மாதத்தில், தேசிய அளவிலான நுகர்வோர் விலைப்புள்ளியின் சராசரியை கணக்கிட்டு, அதில் 115.76 என்ற நிர்ணயிக்கப்பட்ட ஒரு எண்ணை கழிக்கின்றனர். அதில் கிடைக்கும் எண்ணை 100 ஆல் பெருக்குவர்.அத்தொகையை மீண்டும் 115.76ஆல் வகுப்பர். இதையே, அகவிலைபடியாக கணக்கிடுகின்றனர். உதாரணமாக கடந்த 12 மாதங்களின் சராசரி வருமாறு: நுகர்வோர் விலைப்புள்ளி 2012, ஜூலையில்-212, ஆக.,214, செப்., 215, அக்.,217,நவ., 218, டிச.,219, பின் 2013 ஜன., 221, பிப்., 223, மார்ச் 224, ஏப்., 226, மே 228, ஜூன் 231. இவற்றின் கூட்டுத்தொகை 2648. இதன் 12 மாத சராசரி 220.75. இதில் இருந்து 115.76ஐ கழித்தால், கிடைப்பது 104.99. இதை 100ல் பெருக்க கிடைப்பது 10,0499. இத்தொகையை மீண்டும் 115.76ஆல் கழித்தால் கிடைப்பது 90.69.இந்நிலையில் ஏற்கனவே 80 சதவீத அடிப்படை சம்பளம் பெறும் அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் கூடுதலாக வழங்கி, மேற்கண்ட 90 சதவீதத்தை எட்டும்படி செய்வர். இதுவே அகவிலைப்படி கணக்கிடும் முறை.
Aug 8, 2013
அகவிலைப்படி கணக்கீடு எப்படி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி