பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணிசார்பில் ஆர்ப்பாட்டம், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன் நேற்று நடந்தது. வட்டார தலைவர் ஆறுச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார்.ஆர்ப்பாட்டத்தில்,"ஆசிரியர் தினத்தன்று மாவட்ட தலைநகரங்களில்கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்துவது; ஆசிரியர் சங்கங்களையும் ஒன்றிணைத்து போராட்டம் நடத்திட அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்கள் குழு, ஆசிரியர் சங்கங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டுப்போராட்டம் நடத்துவது' உள்ளிட்டவை வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், வட்டார பொருளாளர் கோமதி, மகளிர் அணி தலைவர்சந்திரா, செயலாளர் ராஜாத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்டத்தலைவர் மயில்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணேசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 80 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி