ஆசிரியர் தகுதி தேர்வை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2013

ஆசிரியர் தகுதி தேர்வை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு.

ஆசிரியர் தகுதி தேர்வு வருகிற 17, 18–ந் தேதிகளில் (சனி, ஞாயிறு) நடைபெற உள்ளது. இந்த தேர்வை 6½ லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் எழுதுகிறார்கள். இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு 17–ந் தேதி(சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு 18–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும் நடக்கிறது.பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுத வசதியாக சனிக்கிழமை தமிழகம் முழுவதும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படுகிறது.இந்த விடுமுறைக்கு பதிலாக 31–ந் தேதி (சனிக்கிழமை) பள்ளிகள் இயங்கும். இதற்கான உத்தரவை தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் டி.சபிதா வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி