மாணவர் வழங்கப்படும் நலத்திட்டம் கையேடு தயாரிக்க உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 10, 2013

மாணவர் வழங்கப்படும் நலத்திட்டம் கையேடு தயாரிக்க உத்தரவு.

மாணவர்களுக்கு வழங்கப்படும், நலத்திட்ட உதவிகள் மற்றும் கல்வி உதவி தொகை விபரம் குறித்த கையேடை, தயார் நிலையில் வைத்திருக்க, பள்ளி கல்வி துறை, தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்தி உள்ளது.பள்ளிக் கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:
ஒன்று முதல் பிளஸ் 2 வரை,மாணவர்களுக்கு, இலவச சைக்கிள், கணினி, புத்தகங்கள், பஸ் பாஸ்,சீருடை, கல்வி உதவிகொகையை, தமிழக அரசு வழங்கி வருகிறது.இதில்,தவறுகள் ஏற்படுவதை தடுக்க, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றுடன், மாணவர்களுக்கு வழங்கிய நலத்திட்ட உதவிகள் குறித்த கையேடு தயாரித்து வைக்க வேண்டும். இதை, அந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையல் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி