சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர்கள் பலர் சான்றிதழ்களை போலியாக தயாரித்து பணியில் சேர்ந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.ஆசிரியர்களின் மோசடி உறுதி செய்யப்பட்டால் அவர்களின் ஊதியம் திரும்பப் பெறப்படும் என்றுஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 1995-ஆம் ஆண்டு முதல் 2000-ஆம் ஆண்டு வரையில் பெரும்பாலான இடைநிலை ஆசிரியர்கள் பல்வேறு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நியமிக்கப்பட்டனர். ஆனால் இந்த காலகட்டத்தில் சேர்ந்த பலர் போலி சான்றிதழ்கள் மூலம் பணியில் சேர்ந்துள்ளதாக சில ஆண்டுகளுக்கு முன்பு புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் இந்தப் புகார் மீண்டும் எழுந்துள்ளது.இந்த நிலையில் ஆசிரியர் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் மட்டுமல்லாமல் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு சான்றிதழ்களையும் சிலர் போலியாக தயாரித்து பணியில் சேர்ந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று மாநகராட்சிவட்டாரங்கள் தெரிவித்தன.இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: இந்த மோசடி குறித்து மாநகராட்சி சார்பில் விசாரணை நடக்கிறது. ஏராளமான ஆசிரியர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிகிறது.குறிப்பிட்ட காலக் கட்டத்தில் பணியில் சேர்ந்த பல ஆசிரியர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. மேலும் பல ஆசிரியர்கள் தங்களது சான்றிதழ்களை ஒப்படைக்க மறுத்தனர். அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து சான்றிதழ்கள் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.சில ஆசிரியர்கள் 10-ஆம், 12-ஆம் வகுப்புகளின் சான்றிதழ்களையும் போலியாக தயாரித்து பணியில் சேர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. இப்போது ஆசிரியர்களின் அனைத்து கல்விச் சான்றிதழ்களையும் சரிபார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆசிரியர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தால், அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்கள் இதுவரை பணியின்போது பெற்ற ஊதியத்தையும் திருப்பி வழங்க வேண்டியிருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி