கூட்டுறவு வங்கி உதவியாளர் பணி: பட்டியல் வெளியிடுவதில் தாமதம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2013

கூட்டுறவு வங்கி உதவியாளர் பணி: பட்டியல் வெளியிடுவதில் தாமதம்.

கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கான, நேர்முகத் தேர்வு முடிந்து, ஏழு மாதங்களாகியும், தேர்வானோர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படவில்லை. இதனால், தமிழகம் முழுவதும், 7,200 பேர் கலக்கத்தில் உள்ளனர்.மாநில ஆள்சேர்ப்பு வாரியத்தால், தமிழக கூட்டுறவு வங்கி உதவியாளர்கள் பணி நியமனத்திற்கான எழுத்துத் தேர்வு, கடந்தாண்டு டிச., 9ல் நடந்தது. தேர்ச்சி பெற்றோர் பட்டியல், டிச., 19ல்,வெளியிடப்பட்டது.பட்டியலில் உள்ளோருக்கு, டிச., 28 முதல், ஜன., 3 வரை, சென்னையில் நடந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள, அழைப்பாணை அனுப்பப்பட்டது. 3,589 பணியிடங்களுக்கு, 7,200 பேர் அழைக்கப்பட்டனர். டிச., 28 அன்று மட்டுமே, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. பின், மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. கடந்த, ஜன., 28 முதல், ஜன., 31 வரை, அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் தேர்வு நடந்தது.தேர்வு முடிந்து ஏழு மாதங்களாகியும், தேர்வானவர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படவில்லை. இதனால், நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டோர், கலக்கத்தில் உள்ளனர்.மாவட்ட அதிகாரிகளிடம் கேட்டதற்கு, "சென்னை தலைமை அலுவலகம் தான்,அதுகுறித்து முடிவு செய்ய வேண்டும்" என்றனர். விருதுநகர் மாவட்டத்தில் மட்டும், 500 பேர் காத்திருக்கின்றனர்.இவர்கள், இப்பிரச்னையை, முதல்வர் ஜெ.,யின் கவனத்திற்கு கொண்டு சென்று, தேர்வுப் பட்டியலை விரைந்து வெளியிட நடவடிக்கை எடுக்கும்படி, விருதுநகர் கலெக்டர் ஹரிஹரனிடம் மனு கொடுத்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி