உடனடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பள்ளியில் சேர முடியாமல் பரிதவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2013

உடனடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பள்ளியில் சேர முடியாமல் பரிதவிப்பு.

பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சேர முடியாமல் பரிதவிக்கின்றனர்.தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு, ஜூனில் வெளியானது. இரு பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியருக்கான சிறப்பு உடனடித் தேர்வுகள், ஜூன் 20 முதல், ஜூலை 3 வரை நடந்தன. மாநிலம் முழுவதும், 1,000 பேர் தேர்வெழுதினர்.தேர்வு முடிவுகள், கடந்த வார இறுதியில் வெளியானது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், பிளஸ் 1 வகுப்பில் சேர, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை நாடினர். கடந்த ஜூன் மாதமே, மாணவர் சேர்க்கை முடிந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.இதனால் மாணவ, மாணவியர் அவதிக்குள்ளாகி உள்ளனர்.இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, "அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவர் சேர்க்கை காலியிடங்களை வைத்திருக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது" என்றனர்.ஆனால், இதுபோன்று எந்த உத்தரவும் வரவில்லை எனக் கூறும் பள்ளி நிர்வாகங்கள், மாணவ, மாணவியரை பரிதவிக்கவிட்டு உள்ளன. இதுகுறித்து, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி